

இயக்குநரும், நடிகர் விஜய் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் காயம் காரணமாக கேரள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகரன், கேரளாவில் தங்கி தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். அவருக்கு நேர்ந்த சாலை விபத்தில் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. மேலும், தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட புகைப்படம் வெளியானது.
இது குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் தரப்பில் கேட்டபோது, "அவருக்கு விபத்து எதுவும் ஏற்படவில்லை. இது முற்றிலும் தவறான செய்தியாகும். குளித்துவிட்டு வரும்போது கால் வழுக்கி கீழே விழுந்ததில் சிறு காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் நலமுடம் உள்ளார்" என்று தெரிவித்திருக்கிறார்கள். மேலும், அவரை முழுஒய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.