

பன்னீர் செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள படத்தின் நாயகியாக லட்சுமி மேனனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள்.
'கவண்', 'அநீதி கதைகள்', 'விக்ரம் வேதா', '96' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'புரியாத புதிர்' ஜனவரி 13ம் தேதி பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.
அதனைத் தொடர்ந்து பன்னீர் செல்வம் இயக்கத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் விஜய் சேதுபதி. ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாத இறுதியில் தொடங்கவுள்ளது.
இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக பாபி சிம்ஹா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் நாயகியாக லட்சுமி மேனனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. படப்பிடிப்புக்கான தேதிகள் முடிவானவுடன், ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.
இசையமைப்பாளராக இமான் பணியாற்ற இருக்கிறார். ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.