துருவ நட்சத்திரம் அப்டேட்: ஒளிப்பதிவாளர் மாற்றம்

துருவ நட்சத்திரம் அப்டேட்: ஒளிப்பதிவாளர் மாற்றம்
Updated on
1 min read

'துருவ நட்சத்திரம்' படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வந்த ஜோமன் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக ரவி.கே. சந்திரனின் மகன் சந்தான கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பில் விக்ரமை மட்டும் வைத்து சில முக்கிய காட்சிகளை காட்சிப்படுத்தியுள்ளது படக்குழு.

முதலில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட அனு இம்மானுவேல் கால்ஷீட் தேதிகள் பிரச்சினை காரணமாக விலக, 'பெல்லி சூப்புலு' பட நாயகியான ரீது வர்மாவை ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. இப்படத்தை கவுதம் மேனனின் 'ஒன்றாக என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்துக்கு 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஜோமன், ஒளிப்பதிவு செய்து வந்தார். தற்போது அவருக்கு பதிலாக சந்தான கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிபுரிந்து வருகிறார். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரனின் மகன் ஆவார்.

'ராம் லீலா', 'ஹேப்பி நியூ இயர்' உள்ளிட்ட பிரபல இந்தி படங்களில் ஒளிப்பதிவாளர் ரவிவர்மனிடம் உதவியாளராக பணிபுரிந்தவர் சந்தான கிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in