சிம்புவுடன் சண்டையிட்டது நாடகமே: பப்லு ஒப்புதல்

சிம்புவுடன் சண்டையிட்டது நாடகமே: பப்லு ஒப்புதல்
Updated on
1 min read

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிம்புவுடன் சண்டையிட்டது நாடகமே என்று நடிகர் ப்ருத்விராஜ் (பப்லு) தெரிவித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற நடனப் போட்டிக்கு நடுவராக இருந்தார் சிம்பு. அப்போட்டியில் பப்லுவின் நடனம் சரியில்லை என்று கூறவே, நான் நன்றாகதான் ஆடினேன் என்று பப்லு கூறினார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இறுதியில் சிம்பு பேசும்போது "எனக்கு நடிக்கத் தெரியாது" என்று அழுதுவிட்டார்.

அந்தச் சமயத்தில் சிம்பு - பப்லு இருவருமே பெரும் சர்ச்சையில் சிக்கினார்கள். ஆனால், அது குறித்து தொடர்ச்சியாக பேச இருவருமே மறுத்து விட்டார்கள்.

இந்நிலையில், அப்போது கேமராவுக்கு பின்னால் நடந்த சம்பவம் குறித்து முதன்முறையாக பேசியிருக்கிறார் பப்லு. இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள வீடியோ பேட்டியில், "என்னால் தூக்கி வளர்க்கப்பட்டவர் சிம்பு. ஒரு மாசம் அவர் வீட்டுக்கு எல்லாம் சென்று ப்ரேக் டான்ஸ் சொல்லிக் கொடுத்திருக்கேன். டி.வி, சினிமா பொறுத்தவரையில் எதுவுமே உண்மையில்லை.

மக்களிடையே ஏதாவது பண்ணி, நம்மள பத்தி பேச வைக்கணும். டி.ஆர்.பி.யை ஏற்றணும் என்ற ஒரே நோக்கத்தில்தான் செய்யப்பட்டது. ரியாலிட்டி என்பது டி.வி.யில் கிடையவே கிடையாது. 13 கேமரா சுற்றி இருக்கும்போது எப்படி ரியாலிட்டினு சொல்ல முடியும். ஏம்ப்பா.. நீ இப்படி கேளு. நான் இப்படி பேசுறேன் என்று பேசி வைத்து சண்டை போட்டதுதான் அது" என்று கூறியுள்ளார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in