

தொடர்ச்சியாக படங்களைத் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார் விஷால்.
விஷால், லட்சுமி மேனன், பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்த 'பாண்டிய நாடு' படத்தினை இயக்கினார் சுசீந்திரன். இப்படத்தினை தயாரித்தன் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார் விஷால்.
படமும் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று, வசூலையும் குவித்து வருகிறது. விஷால் இப்போது தமிழகம் முழுவதும், 'பாண்டிய நாடு' திரையிட்டு கொண்டிருக்கும் திரையரங்குகளுக்கு சென்று வருகிறார்.
'பாண்டிய நாடு' படத்தின் டி.வி உரிமையை மட்டும் வைத்துக் கொண்டு, மற்ற உரிமைகள் அனைத்தும் கொடுத்து விட்டு, படம் வெற்றியடைந்தவுடன் டி.வி உரிமைக்கான ஒப்பந்தத்தை தொடங்கினார். அனைத்து முன்னணி சேனல்களும் கடுமையாக போட்டியிட்டன. இறுதியில் ராஜ் டி.வி நிறுவனம் பெரும் விலை கொடுத்து டி.வி உரிமையை தன் வசமாக்கியது.
அடுத்து, திரு இயக்கத்தில் 'நான் சிகப்பு மனிதன்' படத்தில் விஷால் நாயகனாக நடித்து, தயாரிக்கவும் செய்கிறார். படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாத நேரத்தில், இப்படத்தின் விநியோக உரிமையை வாங்கிவிட்டது யு.டிவி நிறுவனம்
விக்ராந்த் நடிக்கும் படத்தினை தயாரிக்க இருக்கிறார். அதுமட்டுமன்றி, நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருக்கும் 'மதகஜராஜா' படத்தினை வெளியிட முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்தளவிற்கு விஷால் தயாரிப்பில் கவனம் செலுத்த சொன்னது விஜயகாந்த் தான் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.