நிபந்தனைகளைத் தளர்த்திய லட்சுமிமேனன்

நிபந்தனைகளைத் தளர்த்திய லட்சுமிமேனன்

Published on

கிளாமராக நடிக்க மாட்டேன், முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன் உள்ளிட்ட தனது நிபந்தனைகளைத் தளர்த்துகிறார் லட்சுமி மேனன்.

விஷால் தயாரித்து நடித்து வரும் படம் 'நான் சிகப்பு மனிதன்'. லட்சுமி மேனன், இனியா, சுந்தர் ராம், ஜெகன் உள்ளிட்டவர்கள் விஷாலுடன் நடித்து வருகிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தினை ஏப்ரல் 11ம் தேதி யு.டிவி நிறுவனம் வெளியிடுகிறது.

இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் விஷால், லட்சுமி மேனன் நெருக்கமாக இருப்பது போல இருந்தன. இதனால், 'லட்சுமி மேனனா இப்படி?' என்று பேச்சு நிலவியது.

'நான் சிகப்பு மனிதன்' படத்தின் மூலம் தன்னால் கிளாமர் வேடத்திலும் நடிக்க முடியும் என்று நிரூபிக்க இருக்கிறாராம் லட்சுமி மேனன். படத்தில் ஒரு முக்கியக் காட்சியாக விஷால், லட்சுமி மேனன் இருவருக்கும் முத்தக் காட்சி வேறு இருக்கிறதாம். இயக்குநர் காட்சியின் முக்கியத்துவத்தை கூறியதும், நான் நடிக்கிறேன் என்று கூறிவிட்டாராம் லட்சுமி மேனன்.

குடும்பப் பாங்கான வேடங்களில் மட்டுமே நடித்து வரும் லட்சுமி மேனனின் இந்த முடிவால் பலரும் ஆச்சர்யப்பட்டுப் போனார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in