

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'விக்ரம் வேதா' திரைப்படம் ஜூலை 7-ம் தேதி வெளியாகவுள்ளது.
'ஓரம் போ', 'வா' உள்ளிட்ட படங்களை இயக்கிய இணை புஷ்கர் - காயத்ரி. இவர்கள் தற்போது 'விக்ரம் வேதா' படத்தை இயக்கி முடித்துள்ளார்கள். படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் ஷாருக்கான் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் இணைந்து வெளியிட்ட, இப்படத்தின் ட்ரெய்லருக்கு சமூகவலைத்தளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ட்ரெய்லரில் ஜூலை 7-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இப்படத்தில் மாதவன், விஜய் சேதுபதி, கதிர், ஷரதா ஸ்ரீநாத், வரலெட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். வினோத் ஒளிப்பதிவு செய்துள்ள படத்துக்கு சாம் இசையமைத்துள்ளார்.
சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகள் மொத்த படப்பிடிப்பையும் படக்குழு முடித்துள்ளது. காவல்துறை அதிகாரியாக மாதவனும், தாதாவாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.