

அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள 'குற்றம் 23', மார்ச் 2-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
'ஆறாது சினம்' படத்தைத் தொடர்ந்து அருண் விஜய் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வந்தார் அறிவழகன். இது மருத்துவம் கலந்த த்ரில்லர் கதையாகும். இப்படத்தை இந்தர்குமார் தயாரித்துள்ளார்.
பாமா நாயகியாக நடித்துள்ள இப்படத்துக்கு இசையமைப்பாளராக விஷால் சந்திரசேகர், கலை இயக்குநராக ஷக்தி, ஒளிப்பதிவாளராக பாஸ்கரன் ஆகியோர் பணிபுரிந்துள்ளார்கள்.
'குற்றம் 23' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகள் நடைபெற்றது. சுமார் 36 மணி நேரம் இடைவிடாது சில முக்கியமான காட்சிகளை படமாக்கினார்கள்.
அனைத்து பணிகளும் முடிந்து பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்தது. ஆனால், திரையரங்குகள் பிரச்சினைக் காரணமாக வெளியீட்டில் பின்வாங்கியது. தற்போது மார்ச் 2-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.