நேரம் வரும்போது அரசியலுக்கு வருவது பற்றிச் சொல்கிறேன்: ரஜினி

நேரம் வரும்போது அரசியலுக்கு வருவது பற்றிச் சொல்கிறேன்: ரஜினி
Updated on
1 min read

நேரம் வரும்போது அரசியலுக்கு வருவது பற்றிச் சொல்கிறேன் என்று ரஜினி கூறியுள்ளார்

மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்துக்கு 'காலா' என பெயரிட்டுள்ளார்கள். நாளை (மே 28) முதல் மும்பையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதற்காக சென்னையிலிருந்து மும்பைக்கு பயணமானார் ரஜினி.

சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர் ரஜினியிடம் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு "நேரம் வரும்போது அரசியலுக்கு வருவது பற்றிச் சொல்கிறேன்" என்று பதிலளித்தார்.

'காலா' படத்தில் ரஜினியோடு நடிக்க ஹியூமா குரேஷி, சமுத்திரக்கனி, அஞ்சலி பாட்டீல் உள்ளிட்ட பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். படத்தின் எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத், ஒளிப்பதிவாளராக முரளி, சண்டைப் பயிற்சியாளராக திலீப் சுப்பராயன் ஆகியோர் பணிபுரியவுள்ளார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in