யாஷ் ராஜ் நிறுவனத்தின் ஆஹா கல்யாணம்

யாஷ் ராஜ் நிறுவனத்தின் ஆஹா கல்யாணம்
Updated on
1 min read

இந்தியில் பெரும் வரவேற்பை பெற்ற 'பேண்ட் பஜா பரத்' படத்தின் தமிழ் ரிமேக் பிப்ரவரி 2014ல் வெளிவர இருக்கிறது.

ரன்வீர் சிங், அனுஷ்கா ஷர்மா நடித்த 'பேண்ட் பஜா பரத்' படம் இந்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. யாஷ் ராஜ் நிறுவனம் தயாரித்தது.

தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் 'பேண்ட் பஜா பரத்' படத்தினை, யாஷ் ராஜ் நிறுவனமே தயாரிக்க முன்வந்தது. தற்போது ஒட்டு மொத்த படப்பிடிப்பு முடிந்து பிப்ரவரி 2014ல் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். ’ஆஹா கல்யாணம்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

நானி, மும்பை மாடல் வாணி குப்தா இருவரும் நடித்திருக்கிறார்கள். விஷ்ணுவர்த்தனிடம் உதவி இயக்குநராக இருந்த கோகுல் இயக்கியிருக்கிறார். தரண் இசையமைத்து இருக்கிறார்.

பணக்கார வீடுகளில் நடக்கும் ஆடம்பரத் திருமணங்கள், அந்த திருமணத்தை நடத்தி தரும் ஏஜென்சிகள், இரண்டிற்கும் இடையிலான பிரச்சினைகளை நகைச்சுவை மிளிர சொல்வதுபோல ’ஆஹா கல்யாணம்' தயாரித்திருக்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in