வேலராமமூர்த்தி கதைக்கு முன் புதுமுகங்களை வைத்து புதிய படம்: பாலா திட்டம்

வேலராமமூர்த்தி கதைக்கு முன் புதுமுகங்களை வைத்து புதிய படம்: பாலா திட்டம்
Updated on
1 min read

வேலராமமூர்த்தியின் கதையை படமாக்கும் முன்பு புதுமுகங்களை வைத்து படமொன்றை இயக்க இயக்குநர் பாலா திட்டமிட்டு இருக்கிறார்.

சசிகுமார் நடித்து தயாரித்த 'தாரை தப்பட்டை' படத்தை இயக்கினார் பாலா. இளையராஜாவின் இசையமைப்பில் உருவான 1000வது படம் இது. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. அதனைத் தொடர்ந்து 'குற்ற பரம்பரை' கதையை பாலா இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின.

'குற்ற பரம்பரை' தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா - இயக்குநர் பாலா - எழுத்தாளர்கள் வேலராமமூர்த்தி மற்றும் ரத்தினகுமார் ஆகியோருக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. "வேல. ராமமூர்த்தி எழுதிய புத்தகத்தில் இருக்கும் சிறுபகுதியை மட்டும் வைத்து, என்னுடைய கற்பனையை கலந்து படமாக்க இருக்கிறேன். அது 'குற்ற பரம்பரை' அல்ல" என்று இயக்குநர் பாலா தெரிவித்தார்.

விஷால், ஆர்யா, அதர்வா, அரவிந்த்சாமி, ராணா உள்ளிட்டவர்களைக் கொண்டு இப்படம் தொடங்கவிருப்பதாக பாலா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். அப்படத்துக்காக முதற்கட்ட பணிகளை கவனித்து வந்தார்.

தற்போது அப்படத்துக்கு முன்பாக முழுக்க புதுமுகங்களை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார் பாலா. இதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. புதுமுகங்கள் படத்தை முடித்துவிட்டு, முன்னணி நாயகர்கள் இணையும் படத்தை பாலா இயக்குவார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in