மீண்டும் இணையும் கமல் - பாலசந்தர்!

மீண்டும் இணையும் கமல் - பாலசந்தர்!
Updated on
1 min read

மீண்டும் கமல் - பாலசந்தர் இணைந்திருப்பது தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.

'விஸ்வரூபம் 2' படத்தினைத் தொடர்ந்து கமல், ரமேஷ் அரவிந்த் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார். 'விஸ்வரூபம் 2' படப்பணிகளை கவனித்துக் கொண்டே, 'உத்தம வில்லன்' படத்தின் கதைப்பணிகளையும் கவனித்து வருகிறார்.

'உத்தம வில்லன்' படத்தின் கதை, திரைக்கதையை கமல் எழுத, ரமேஷ் அரவிந்த் இயக்கவிருக்கிறார். இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் இயக்குநர் பாலசந்தர் நடிக்க இருக்கிறார்.

இப்படத்தின் கதையை எழுதும் போதே இந்த பாத்திரத்தில் இயக்குநர் பாலசந்தர் தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து எழுதியிருக்கிறார் கமல். பாலசந்தரிடம் கேட்டவுடன், அவரும் சரி நடிக்கிறேன் என்று கூறி விட்டாராம்.

ஏப்ரலில் வெளியாக இருக்கும் 'விஸ்வரூபம் 2' படத்தினைத் தொடர்ந்து, 'உத்தம வில்லன்' படப்பிடிப்பு தொடங்குகிறது. இப்படத்தினை முதல் பிரதி அடிப்படையில் இயக்குநர் லிங்குசாமியின் நிறுவனமான திருப்பதி பிரதர்ஸுக்கு தயாரித்து கொடுக்கிறது ராஜ்கமல் நிறுவனம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in