

வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் 'பார்ட்டி' படத்தினை பிஜி தீவுகளில் படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளது.
'சென்னை 28' 2-ம் பாகத்தைத் தொடர்ந்து அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமானார் வெங்கட்பிரபு. 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வெங்கட்பிரபுவின் படம் அறிமுகப்படுத்தப்பட்டது.
'பார்ட்டி' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சத்யராஜ், ஜெயராம், நாசர், சம்பத், ஜெய், மிர்ச்சி சிவா, சந்திரன், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி மற்றும் நிவேதா பெத்துராஜ் உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.
'பார்ட்டி' படத்தின் பிரதான காட்சிகள் அனைத்தையும் பிஜி தீவுகளில் 70 நாட்கள் படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இதற்காக விரைவில் படக்குழு பிஜி தீவுகளுக்காக பயணிக்கவுள்ளார்கள்.
பிரேம்ஜி இசையமைப்பாளராக பணிபுரியவுள்ள இப்படத்துக்கு ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். ப்ரவீன் கே.எல் எடிட்டிங் பணிகளை கவனிக்கவுள்ளார்.