

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் 3வது நாயகியாக சனாகான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்துக்கு 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சிம்பு கதாநாயகனாக நடிக்கும் இப்படத்துக்கு யுவன் இசையமைக்கிறார். மைக்கேல் ராயப்பன் தயாரித்து வருகிறார்.
4 கெட்டப்களில் நடிக்கவுள்ளார் சிம்பு. இதில் 'மதுரை மைக்கேல்' கதாபாத்திரத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. 'அஸ்வின் தாத்தா' கதாபாத்திரத்துக்கான இறுதிகட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெறவுள்ளது. ஸ்ரேயா மற்றும் தமன்னா இருவரும் சிம்புவுக்கு நாயகிகளாக நடித்துள்ளார்கள்.
சிம்புவின் 3-வது கதாபாத்திரத்தின் நாயகி வேடத்துக்கு பல்வேறு நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது படக்குழு. இறுதியாக சனாகான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தில் கேங்க்ஸ்டர் கதாபாத்திரத்தில் சனாகான் நடிக்கவிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தார்கள்.
ஏற்கனவே சிம்பு - சனாகான் இருவரும் இணைந்து 'சிலம்பாட்டம்' படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.