

ஊழர் புகார் எழுந்துள்ளதைத் தொடர்ந்து சிறப்பு செயற்குழு கூட்டத்தை நடத்த தென்னிந்திய நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் ரூ.3 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாகவும், அதற்கு தன்னிடம் ஆதாரம் உள்ளது என்றும் நடிகர் சங்க உறுப்பினர் வாராஹி கூறியிருந்தார். இது தொடர்பாக விளக்கம் கேட்க அவர் நேற்று முன்தினம் நடிகர் சங்கத்துக்கு சென்றார். அப்போது அங்கே வாராஹியின் ஆதர வாளர்களுக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வெளி யிடப்பட்டுள்ள அறிக்கை:
நடிகர் சங்கத்தின் மீது தேவையில்லாமல் அரசியல் சாயம் பூசப்படுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அரசாங்கத்தோடு இணைந்தும், இயைந்தும் நடந்து கொள்வது சங்கத்தின் வளர்ச்சிக்கு முக்கியம். சங்கத் தேர்தலை நியாயமான முறையில் நடத்திட வழி செய்த முதல்வருக்கு சங்கம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறது. எங்கள் சங்கத்தின் மரியாதைக்குரிய மூத்த உறுப்பினரான அவர் கைகளால் சங்கக் கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டும் தருணத்துக்காக காத்திருக்கிறோம்.
கட்டிடம் கட்டவேண்டும் என்பது தேவை. ஆனால் அதற்கு காலம் அனுமதிக்க வேண்டும். சட்டப் படியான அனைத்து முறைகளிலும் அது கட்டப்படும். சமீபத்தில் நடிகர் சங்கத்தின் சட்டதிட்டங்களை மீறி செயல்பட்ட சில உறுப் பினர்களை தற்காலிகமாக நீக்கு வதற்காக தன்னிலை விளக்கம் கேட்டு அவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். சிலர் அதற் காக நீதிமன்றத்தை நாடியிருக் கிறார்கள்.
நீதிமன்றத்தில் அது நிலுவையில் இருக்கும்போதே, அவர்கள் சில நபர்களை சேர்த்துக் கொண்டு அலுவலக ஊழியர்களை தாக்கும் சம்பவம் நடந்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். புதிய நிர்வாகத்துக்கு நற்பெயர் வருவதை பொறுத்துக்கொள்ள முடியாததாலும், சங்கத்துக்கு நஷ்டங்களை ஏற்படுத்திய சில நபர்களின் தூண்டுதலாலும் இச்சம்பவம் நடந்து இருக்கிறது.
போலீஸில் புகார்
இது குறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சங்க மேலாளரால் புகார் அளிக்கப் பட்டுள்ளது. மேலும் சென்னை காவல் துறை ஆணையரிடமும் நடிகர் சங்கத் தலைவர் இது குறித்து புகார் அளிக்க இருக்கி றார். இந்தச் சம்பவத்தை சாதார ணமாக எடுத்துக்கொள்ள முடி யாது. இது எதிர்காலத்தில் தவறான முன்னுதாரணமாகிவிடும் என்பதால் மிக கடுமையான நடவ டிக்கை எடுக்க நினைக்கிறோம். அதற்காக சங்கத்தின் அவசர சிறப்பு செயற்குழு கூட்டம் உடனடி யாக நடத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.