முழுவீச்சில் நான் சிகப்பு மனிதன் படப்பிடிப்பு

முழுவீச்சில் நான் சிகப்பு மனிதன் படப்பிடிப்பு
Updated on
1 min read

திரு இயக்கத்தில் விஷால் நடித்து வரும் 'நான் சிகப்பு மனிதன்' படத்தின் படப்பிடிப்பு படுவேகமாக நடைபெற்று வருகிறது.

விஷால், லட்சுமி மேனன், ஜெகன், சுந்தர் ராம் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் 'நான் சிகப்பு மனிதன்'. விஷால் தயாரித்து வரும் இப்படத்தினை, யு.டிவி நிறுவனம் வெளியிட இருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில் தொடங்கப்பட்ட இப்படப்பிடிப்பு 50% முடிவடைந்து இருக்கிறது. இப்படம் குறித்து இயக்குநர் திருவிடம் கேட்ட போது, "ஒவ்வொருவருக்கும் ஆசைகள் உண்டு. ஆனால் அதை அடைய முயற்சிகள் எடுப்பதில்லை. தடைகளைக் கண்டு விட்டுவிடுகிறார்கள். ஒரு மனிதனின் ஆசைகள் பற்றி கதை தான் இது. படத்தின் நாயகன் என்ன ஆசைப்படுகிறான். அதை நோக்கிச் செல்ல என்னென்ன தடைகள் உள்ளன? எல்லாவற்றையும் மீறி எப்படி எதிர் கொண்டு வெற்றி அடைகிறான் என்பதே 'நான் சிகப்பு மனிதன்'

இப்படத்தில் விஷாலின் கதாபாத்திரம் புதிது. சினிமாவில் போலீஸ் முதல் பொறுக்கி வரை ரொம்ப நல்லவன் துரோகி விரோதி எல்லாவற்றுக்கும் முன் உதாரணங்கள் உண்டு. விஷால் பாத்திரத்துக்கு எந்த முன் மாதிரியும் இல்லை. கதையும் புதிது, பாத்திரமும் புதிது.

எல்லாருமே விஷால் நண்பராக இருப்பதால், 3வது படம் கொடுத்தாரா என்று. நண்பராக இருந்தால் பணம் கொடுத்து உதவலாம், படம் கொடுப்பாரா? இந்தக் கதை பிடித்துதான் நடிக்க ஒப்புக் கொண்டார்" என்றார்.

இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், "'நான் சிகப்பு மனிதன்' இசையின் இறுதி வடிவத்திற்கான பணிகளை தொடங்கி விட்டேன். விரைவில் இசை வெளியீடு இருக்கும்" என்று தெரிவித்து இருக்கிறார்.

ஏப்ரல் 11ம் தேதி வெளியாக இருக்கும் 'நான் சிகப்பு மனிதன்' படக்குழுவின் திட்டமிடுதலைப் தமிழ் திரையுலகினர் பலரும் ஆர்வத்துடன் விசாரித்து வருகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in