

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்தில் சதீஷ் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இருவரும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்கள்.
'ரெமோ' படத்தைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்க இருக்கிறது. நயன்தாரா நாயகியாகவும், ஃபகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆர்.டி.ராஜா தயாரிக்க இருக்கிறார்கள்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனோடு நடிக்கவிருக்கும் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. சதிஷ் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இருவரும் சிவகார்த்திகேயனோடு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அனிருத் இசையமைக்க இருக்கிறார்.
செப்டம்பரில் துவங்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இப்படத்தை முடித்துவிட்டு பொன்.ராம் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.