செல்வா - அரவிந்த்சாமி இணையும் வணங்காமுடி

செல்வா - அரவிந்த்சாமி இணையும் வணங்காமுடி
Updated on
1 min read

செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி நடித்து வரும் படத்துக்கு 'வணங்காமுடி' என தலைப்பிட்டுள்ளார்கள்.

'சதுரங்க வேட்டை 2' பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, செல்வா இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கினார் அரவிந்த்சாமி. ரித்திகா சிங், நந்திதா, சாந்தினி, கணேஷ் வெங்கட்ராம், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படத்துக்கு இமான் இசையமைத்து வருகிறார்.

பெயரிடப்படாமல் நடைபெற்று வந்த படத்துக்கு 'வணங்காமுடி' என தலைப்பிட்டுள்ளது படக்குழு. விரைவில் இறுதிகட்ட படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

மேஜிக் பாக்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தைத் தொடர்ந்து 'பாஸ்கர் தி ராஸ்கல்' ரீமேக்கில் நடிக்க திட்டமிட்டுள்ளார் அரவிந்த்சாமி. இவ்விரண்டு படங்களின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டு, கார்த்தி நரேன் இயக்கும் 'நரகாசூரன்' படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in