

பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ள 'தூய்மை இந்தியா' திட்டத்துக்கு, நடிகர் சூர்யா ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தியில், "நம்மையும், நமது இல்லத்தையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்வது முக்கியமானதாகும். இது ஒவ்வொரு வரும் ஆரோக்கியமாக இருக்க உதவும்.
நமது குழந்தைகளுக்கு செல்வத்தை அளிப்பது எவ்வளவு முக்கியமோ, தூய்மையான சுற்றுச்சூழலை அவர்களுக்கு அளிப்பது அதைவிட முக்கியமானது. ஆரோக்கியமான இந்தியாவுக்கு சுத்தமான இந்தியாவை உருவாக்குவோம்.
பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை பாரத இயக்கத்தில் இணைந்து அதற்கு ஆதரவு தாருங்கள். ஜெய் பாரதம், தூய்மை பாரதம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.