ஜி.வி.பிரகாஷ் நாயகியாக மகிமா நம்பியார் ஒப்பந்தம்

ஜி.வி.பிரகாஷ் நாயகியாக மகிமா நம்பியார் ஒப்பந்தம்
Updated on
1 min read

ரவி அரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ள 'ஐங்கரன்' பட நாயகியாக மகிமா நம்பியார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

'4ஜி', 'சர்வம் தாளமயம்', 'அடங்காதே' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஜி.வி.பிரகாஷ். மேலும் 'ப்ரூஸ் லீ' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்படங்களைத் தொடர்ந்து 'ஈட்டி' படத்தின் இயக்குநர் ரவிஅரசு கூறிய கதை பிடித்துவிடவே, தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். 'ஐங்கரன்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பொங்கலுக்கு வெளியிடப்பட்டது.

இப்படத்தின் நாயகி மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்களை ஒப்பந்தம் செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு. பல்வேறு முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது படக்குழு.

இறுதியாக ஜி.வி.பிரகாஷ் நாயகியாக மகிமா நம்பியார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இம்மாதம் 3-வது வாரத்தில் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கி, ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்தை 'ஆரஞ்சு மிட்டாய்' மற்றும் 'றெக்க' படங்களின் தயாரிப்பாளர் கணேஷ் தயாரிக்கவிருக்கிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in