கபாலி வெளியீட்டு தேதியில் மாற்றம்?

கபாலி வெளியீட்டு தேதியில் மாற்றம்?
Updated on
1 min read

ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் 'கபாலி' வெளியீட்டு தேதியில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வெளிநாட்டு விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் ஜூலை 15-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள். ஏனென்றால், வெளிநாட்டிலும் படத்தை சென்சார் பண்ணுவார்கள் என்பதால் அங்கு தான் முதலில் அனுப்பி வைப்பார்கள்.

தற்போது வெளிநாட்டு விநியோகஸ்தர்களுக்கு ஜூலை 15-ம் தேதி 'கபாலி' வெளியீடு இல்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஒரு வாரம் தள்ளி ஜூலை 22-ம் தேதி வெளியாகும் என்று கூறியிருக்கிறார்கள். 'கபாலி' வெளியீட்டு தேதி மாற்றத்தால் ரஜினி ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள்.

'கபாலி' ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், ஜூலை 7-ம் தேதி சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் 'தில்லுக்கு துட்டு' படத்தை வெளியிட தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in