பிப்.24-ல் கனவு வாரியம் வெளியீடு: வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் முடிவு

பிப்.24-ல் கனவு வாரியம் வெளியீடு: வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் முடிவு

Published on

அருண் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கனவு வாரியம்' படத்தை பிப்ரவரி 24-ம் தேதி வெளியிட வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் நிலவிய மின்வெட்டு பிரச்சினையை மையாக வைத்து டிசிகாப் சினிமாஸ் தயாரிப்பில் உருவான படம் 'கனவு வாரியம்'. அருண் சிதம்பரம் இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ளார்.

இத்திரைப்படம் சர்வதேச அளவில் 7 விருதுகளை வென்றுள்ளது. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ரிட்லி ஸ்காட், ஜார்ஜ் லுகாஸ் போன்ற பெரும் இயக்குநர்கள் வென்ற 'ரெமி' விருதை 'கனவு வாரியம்' திரைப்படம் வென்றுள்ளது. இவ்விருதை வென்ற முதல் இந்தியத் திரைப்படம் 'கனவு வாரியம்' என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

'கனவு வாரியம்' படத்தை இந்தியா முழுவதும் வெளியிடும் உரிமையை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. இந்நிறுவனம் வெளியிடும் முதல் தென்னிந்திய திரைப்படம் இதுவாகும்.

பிப்ரவரி 24ம் தேதி 'கனவு வாரியம்' திரைப்படம் வெளியாகும் என அதிகாராபூர்வமாக வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in