சாமி 2 அப்டேட்: ஹாரிஸ் நீக்கம், இசையமைப்பாளராக தேவி ஸ்ரீபிரசாத் ஒப்பந்தம்

சாமி 2 அப்டேட்: ஹாரிஸ் நீக்கம், இசையமைப்பாளராக தேவி ஸ்ரீபிரசாத் ஒப்பந்தம்
Updated on
1 min read

'சாமி 2' படத்தின் இசையமைப்பாளர் பொறுப்பிலிருந்து ஹாரிஸ் ஜெயராஜ் நீக்கப்பட்டு, தேவி ஸ்ரீபிரசாத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

'ஸ்கெட்ச்' மற்றும் 'துருவ நட்சத்திரம்' ஆகிய படங்களைத் தொடர்ந்து 'சாமி 2' படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் விக்ரம். 'இருமுகன்' படத்தின் தயாரிப்பாளரான ஷிபு தமீன்ஸ் தயாரிக்கவுள்ளார்.

'சாமி 2' படத்துக்கு திரைக்கதை வடிவத்தை இறுதி செய்யும் பணியில் தீவிரமாகவுள்ளார் ஹரி. முதல் பாகத்தில் நாயகியாக நடித்த த்ரிஷா, இதிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு.

இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பின் போது, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். தற்போது அவருக்கு பதிலாக தேவி ஸ்ரீபிரசாத்தை ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு.

ஜூலை மாதத்தில் முதற்கட்ட படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. தற்போது இதர நடிகர் - நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in