மலையாளத்தில் மோகன்லாலுடன் அறிமுகமாகும் விஷால்

மலையாளத்தில் மோகன்லாலுடன் அறிமுகமாகும் விஷால்
Updated on
1 min read

உன்னி கிருஷ்ணன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கவுள்ள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஷால்.

மிஷ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன்' மற்றும் புதுமுக இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் 'இரும்புத்திரை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் விஷால். இதனைத் தொடர்ந்து 'சண்டக்கோழி 2' படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தற்போது முதன் முறையாக நேரடி மலையாள படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஷால். இப்படத்தை உன்னி கிருஷ்ணன் இயக்கவுள்ளார். மோகன்லால் நாயகனாக நடிக்கவுள்ள இப்படத்தில் விஷால் மற்றும் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இப்படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கவுள்ளார்.

தற்போது மேஜர் ரவி இயக்கத்தில் உருவாகி வரும் '1971' படத்தைத் தொடர்ந்து உன்னி கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் மோகன்லால்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in