

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் ஏப்ரல் 2-ம் தேதி நடக்க உள்ளது. இதற் கான மனுத் தாக்கல் முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் சென்னையில் நேற்று வெளியிடப் பட்டது. இதில் தலைவர் பதவிக்கு கலைப்புலி ஜி.சேகரன், கேயார், ராதாகிருஷ்ணன், டி.சிவா, விஷால் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
துணைத் தலைவர் பதவிக்கு கவுதம் வாசுதேவ் மேனன், பவித்ரன், பிரகாஷ்ராஜ், ஏ.எம்.ரத்னம், சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட 8 பேர் போட்டியிடுகின்றனர். பொருளாளர் பதவிக்கு பாபு கணேஷ், எஸ்.ஏ.சந்திரசேகரன், எஸ்.ஆர். பிரபு, விஜயமுரளி ஆகியோரும், கவுரவ செயலாளர்கள் பதவிக்கு ஏ.எல்.அழகப்பன், ஞானவேல் ராஜா, சிவசக்தி பாண்டியன் உள்ளிட்ட 7 பேரும் போட்டியிடுகின்றனர்.