

இது ஒன்றும் மக்களின் தீர்ப்பு அல்ல என்று தமிழக அரசியலின் இன்றைய சூழல் குறித்து அரவிந்த்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவை சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. சட்டப்பேரவைக்குள் தான் தாக்கப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார்.
மேலும், மெரினாவில் உள்ள காந்தி சிலை அருகில் ஸ்டாலின் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவரோடு கூடிய திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட அனைவரையுமே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தொடர்ச்சியாக இன்றைய நிகழ்வுகள் குறித்து அரவிந்த்சாமி கருத்து தெரிவித்து வருகிறார். தற்போது, "என்னைப் பொறுத்தவரை தற்போதுள்ள சூழ்நிலையில் மறுதேர்தல் மட்டுமே ஒரே தீர்வு. இது ஒன்றும் மக்களின் தீர்ப்பு அல்ல" என்று தெரிவித்துள்ளார் அரவிந்த்சாமி.