

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வந்த 'பாபநாசம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றது. இறுதி கட்டப்பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது.
மோகன்லால், மீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜீது ஜோசப் இயக்கத்தில் வெளியான மலையாள படம் 'த்ரிஷ்யம்'. மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ரீமேக் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
தெலுங்கில் வெங்கடேஷ், மீனா நடித்த 'த்ரிஷ்யம்' ரீமேக்கை நடிகை ஸ்ரீப்ரியா இயக்கத்தில் வெளியாகி, அங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழில் கமல் நடிக்க, ஜீது ஜோசப்பே இயக்குவார் என தீர்மானிக்கப்பட்டது.
திருநெல்வேலி, கேரளா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தினார்கள். மோகன்லால் கதாபாத்திரத்தில் கமல், மீனா கதாபாத்திரத்தில் கவுதமி ஆகியோர் நடித்து வந்தார்கள். 39 நாட்களில் மொத்தப் படப்பிடிப்பும் முடிவுற்றது.
அடுத்த வாரத்தில் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் துவங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படம் வெளியிடலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.