

'நிமிர்ந்து நில்' படத்தைத் தொடர்ந்து சமுத்திரக்கனி தயாரித்து, நடிக்கவிருக்கும் படத்தில் நாயகியாக நடிக்க அமலா பால் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி, அமலா பால் நடித்திருக்கும் 'நிமிர்ந்து நில்' படத்தில் இறுதிகட்ட பணிகள் படுதீவிரமாக நடைபெற்று வருகிறது. பிப்ரவரியில் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். சென்சார் முடிந்தவுடன் படத்தின் வெளியீட்டு தேதியினை அறிவிக்க இருக்கிறார்கள்.
'நிமிர்ந்து நில்' படத்தைத் தொடர்ந்து சமுத்திரக்கனி ஒரு படத்தை தயாரித்து, நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் நாயகியாக நடிக்கவிருக்கிறார் அமலாபால். சமுத்திரக்கனி, அமலா பால் ஆகியோரோடு கிஷோர் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
திகில் பின்னணியில் இப்படத்தின் கதை, திரைக்கதை அமைந்து இருக்கிறது. ஒரே கட்டமாக இப்படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.