அரண்மனை அரசி ஹன்சிகா!

அரண்மனை அரசி ஹன்சிகா!
Updated on
1 min read

சுந்தர்.சி இயக்கவிருக்கும் ‘அரண்மனை’ படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகிருக்கிறார் ஹன்சிகா.

‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்திற்கு கிடைத்த வரவேற்பினைத் தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கான கதை விவாதத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் இயக்குநர் சுந்தர்.சி

இதனிடையே சுந்தர்.சி இயக்கத்தில் தயாராகி, நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த ‘மதகஜராஜா’ படம் வெளியாகும் சூழ்நிலை உருவானது. ஆகையால் தனது அடுத்த படத்தின் பணிகளை ஒத்திவைத்தார். ஆனால் ‘மதகஜராஜா’ படம் வெளியாவதற்கான வாய்ப்பு மக்கிப்போனதால், தற்போது தனது அடுத்த படத்தின் பணிகளை துரிதப்படுத்திவிட்டார் சுந்தர்.சி.

படத்திற்கு ‘அரண்மனை’ என்று தலைப்பிட்டு இருக்கிறார். ‘சந்திரமுகி’ பாணியில் படத்தில் தனது காமெடியை நிரப்பி ரசிகர்களை சிரிக்கவும், பயமுறுத்தவும் திட்டமிட்டு இருக்கிறாராம் சுந்தர்.சி. படத்தில் 3 நாயகிகள் இருக்கிறார்கள்.

ஹன்சிகா, லட்சுமிராய், ஆண்ட்ரியா ஆகியோர் படத்தில் ரசிகர்களை கவர இருக்கிறார்கள். சுந்தர்.சியே இப்படத்தினை இயக்கி, நாயகனாகவும் நடிக்கவிருக்கிறார். இது குறித்து ஹன்சிகா “ ‘அரண்மனை’ படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறேன். சுந்தர்.சி சார் என் மீது நம்பிக்கை வைத்து நாயகி வேடமளித்தற்கு நன்றி. மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்றுவது குறித்து சந்தோஷமாக இருக்கிறது. படத்தின் கதை, எனது பாத்திரத்தை சுற்றியே நடப்பதால் மகிழ்ச்சி” என்று ட்விட்டர் தளத்தில் கூறியுள்ளார்.

சுந்தர்.சி இயக்கிய ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தின் நாயகியும் ஹன்சிகா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in