கோடை விடுமுறை போட்டியில் குவியும் படங்கள்

கோடை விடுமுறை போட்டியில் குவியும் படங்கள்
Updated on
1 min read

கோடை விடுமுறை நெருங்குவதை முன்வைத்து, பல படங்களை போட்டியில் களமிறங்கவுள்ளது.

பொங்கல், தீபாவளி பண்டிகைகளைத் தொடர்ந்து அதிக படங்கள் வெளியாவது கோடை விடுமுறையாகும். பள்ளி மாணவர்கள் அனைவருக்குமே விடுமுறை என்பதால் பலரும் இந்தருணத்தில் தங்களுடைய படங்களை வெளியிட முனைப்பு காட்டுவார்கள்.

இந்தாண்டு கோடை விடுமுறைக்கு, ஏப்ரல் 7ம் தேதி 'காற்று வெளியிடை', ஏப்ரல் 14ம் தேதி 'பவர் பாண்டி', 'சிவலிங்கா', 'கடம்பன்' ஆகிய படங்கள் தங்களுடைய வெளியீட்டை உறுதி செய்துள்ளது.

மேலும், ஏப்ரல் 28ம் தேதி ராஜமெளலியின் 'பாகுபலி - தி கன்க்ளூஷன்' வெளியாகவுள்ளது. இந்த தேதியில் தமிழில் வேறு எந்த ஒரு படமும் தங்களுடைய வெளியீட்டை உறுதி செய்யவில்லை. பெரும் முதலீடு மற்றும் எதிர்பார்ப்பு நிலவுவது தான் காரணம் என்கிறார்கள்.

மே 5ம் தேதியும் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. மே 12ம் தேதி 'மாயவன்', 'வனமகன்' மற்றும் 'சரவணன் இருக்க பயமேன்' படங்கள் வெளியாகவுள்ளன. அதனைத் தொடர்ந்து வரும் வாரங்களில் தங்களுடைய படங்களை வெளியிட பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.

பல முன்னணி நடிகர்களின் படங்கள் கோடை விடுமுறைக்கு வெளியாவதால், திரையரங்கு உரிமையாளர்களும் இந்த விடுமுறை தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நம்பிக்கையில் உள்ளார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in