

தமிழ் திரையுலகில் தொடர்ச்சியாக படங்கள் வெளியாகியுள்ள சூழ்நிலை உருவாகியுள்ளதால் பெரும் கலக்கத்தில் இருக்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.
செப்டம்பர் 20 ஆம் தேதியில் இருந்து நவம்பர் மாதம் வரை தொடர்ச்சியாக படங்கள் வெளியாகியுள்ளன. இதனால் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் அனைவருமே சந்தோஷத்தில் இருந்தாலும், என்ன ஆகுமோ என்ற கலக்கத்தில் இருக்கிறார்கள் விநியோகஸ்தர்கள். காரணம், படம் நன்றாக ஓடிக்கொண்டிருந்தாலும், அதனை எடுத்துவிட்டு புதுப் படத்தினை வெளியிடும் சூழ்நிலை உருவாகிவிடும்.
செப்டம்பர் 20: மிர்ச்சி சிவா - சந்தானம் நடிக்கும் ‘யா யா’ மற்றும் ஷாம் நடித்து நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் ‘6 மெழுகுவர்த்திகள்’ ஆகிய படங்கள் வெளியாகிறது.
செப்டம்பர் 27: ஆர்யா - நயன்தாரா நடிக்கும் ‘ராஜா ராணி’, விஜய் சேதுபதி நடிக்கும் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, மிஷ்கின் இயக்கியிருக்கும் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ஆகிய படங்கள் தங்களது வெளியீட்டை உறுதிசெய்திருக்கின்றன. ‘கல்யாண சமையல் சாதம்’ படமும் இத்தேதியில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 4 : எதிர்பார்ப்பில் இருக்கும் ‘பீட்சா 2’, கரு.பழனியப்பன் இயக்கியிருக்கும் ‘ஜன்னல் ஓரம்’, ஷக்கி சிதம்பரம் இயக்கியிருக்கும் ‘மச்சான்’ ஆகிய படங்கள் வெளிவரக்கூடும். தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளியாகமால் இருந்த ‘களவாடிய பொழுதுகள்’ வெளியாகலாம்.
அக்டோபர் 11 : தனுஷ் - சற்குணம் இணைப்பில் உருவாகியிருக்கும் ‘நய்யாண்டி’, கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் ‘வணக்கம் சென்னை’ உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து தீபாவளிக்கு அஜித்தின் ‘ஆரம்பம்’, கார்த்தியின் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ஆர்யா நடிக்கும் ‘இரண்டாம் உலகம்’, விஷாலின் ‘பாண்டிய நாடு’ ஆகிய படங்கள் விளம்பரப்படுத்த துவங்கிவிட்டன. இவ்வறு படங்கள் தொடர்ச்சியாக வெளியாகருப்பதால், விநியோகஸ்தர்களின் நிலைமைதான் மோசமாகியுள்ளது.