மலையாள திரையுலகம் மீது பார்வதி மேனன் சாடல்

மலையாள திரையுலகம் மீது பார்வதி மேனன் சாடல்
Updated on
1 min read

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்களை நடிகை பார்வதி மேனன் கடுமையாக சாடியுள்ளார்.

மகேஷ் நாராயண் இயக்கி தயாரித்த படம் 'டேக் ஆஃப்'. பகத் பாசில், பார்வதி மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இப்படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் அளித்துள்ள பேட்டியில், "மலையாளத் திரையுலகில் முன்னணி நாயகர்களும், பெரிய இயக்குநர்களும் என்னை வெளிப்படையாகவே ’ஒத்துழைக்க’ வேண்டும் என்றனர். அவர்களது அழைப்பை நிராகரித்துவிட்டேன்.

மேலும் சிலர் பட வாய்ப்பு தருவதாகவும், அதற்கு உடன்பட வேண்டும் எனக் கேட்டனர். எனக்கு எப்போதுமே அதில் உடன்பாடில்லை என்பதால் தவிர்த்துவிட்டேன். இதனால் சில காலம் மலையாளத் திரையுலகில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தேன். ஆனால், எனது கொள்கையில் மிகவும் உறுதியாகவே இருந்தேன்.

மற்ற மொழி படங்களில் நடித்த போது கூட, இப்படியொரு நிலை ஏற்படவில்லை. ஆனால் என் சொந்த மாநிலமான கேரளத் திரையுலகில் எனக்குக் நேர்ந்த இந்த அவமரியாதை எனக்கு மிகவும் ஆச்சரியத்தை அளித்தது.

படுக்கைக்கு அழைப்பது மட்டுமே ஆண் தனம் என்று பல ஆண்கள் நினைக்கிறார்கள். பெண்களின் பலவீனத்தை தங்களது பலமாக நினைத்துக் கொள்கிறார்கள். இப்போதும் இந்த மாதிரியான சம்பவங்கள் மலையாள திரையுலகில் நடந்து கொண்டுத் தான் இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in