

'பென்சில்' படத்தினைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் அடுத்த படத்திற்கு 'த்ரிஷா இல்லன்னா நயன்தாரா' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஜி.வி.பிரகாஷ், தனது நடிப்பு ஆசையால் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். முதலாதவாக நடிக்கும் 'பென்சில்' படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். மணி நாகராஜ் இயக்கி வருகிறார். இசையமைக்கும் பொறுப்பையும் ஜி.வி. பிரகாஷ் ஏற்று இருக்கிறார்.
'பென்சில்' படத்தினைத் தொடர்ந்து, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் அடுத்த படத்திற்கு 'த்ரிஷா இல்லன்னா நயன்தாரா' என்று பெயரிட்டு இருக்கிறார்கள். இயக்குநர் மேஜர் ரவியின் துணை இயக்குநர் ஆதிக் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க இருக்கும் இப்படத்திற்கு ரிச்சட்நாதன் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். ரிபேல் ஸ்டூடியோ நிறுவனம் இப்படத்தினை தயாரிக்க இருக்கிறது.