சுசீந்திரனின் அறம் செய்து பழகு ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சுசீந்திரனின் அறம் செய்து பழகு ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
Updated on
1 min read

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அறம் செய்து பழகு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கார்த்தி வெளியிட்டார்.

'மாவீரன் கிட்டு' படத்தைத் தொடர்ந்து 'அறம் செய்து பழகு' என பெயரிடப்பட்டுள்ள படத்தை இயக்கி வருகிறார் சுசீந்திரன். சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரீன், ஹரீஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா ஆகியோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகும் இப்படத்தை அன்னை பிலிம் ஃபாக்டரி சார்பில் ஆண்டனி தயாரிக்கிறார். சுசீந்திரன், இப்படத்தின் மூலமாக தெலுங்கு திரையுலகிலும் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மேலும், 'அறம் செய்து பழகு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in