

ஊடகங்கள் சம்பவங்களை மிகவும் ஊதிப் பெரிதாக்கக்கூடாது என்று கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல் இன்று மேலும் ஒரு அதிரடி திருப்பத்தை எதிர்கொள்ளும் சூழலில் இருக்கிறது. தமிழக முதல்வராகியுள்ள எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவை பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான பலப்பரீட்சை சட்டப்பேரவையில் நடந்து கொண்டிருக்கிறது.
காலையிலிருந்து எம்.எல்.ஏக்களின் தொடர் அமளியால் சட்டப்பேரவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை சுற்றிலும் அதிகமான போலீஸார் குவிக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "வீரமணியிடம் கலந்து ஆலோசிக்காமல் நான் துணிச்சலாக சொல்கிறேன். திராவிட கழகம் மக்களுக்காக பணியாற்ற வேண்டும் இல்லையென்றால் சும்மா இருக்க வேண்டும். இது அனைத்து திராவிட இயக்கத்துக்கும் பொருந்தும்.
ஊடகங்கள் சம்பவங்களை மிகவும் ஊதிப் பெரிதாக்கக்கூடாது. இதற்கு முன்னும் மோசமான சம்பவங்களை தமிழக சட்டப்பேரவையில் பார்த்துள்ளோம். சோம்பேறிப் புரட்சியாளர்கள் (நான் உட்பட) இப்போது மட்டும் ஏன் அதிர்ச்சிடைய வேண்டும்?" என்று தெரிவித்துள்ளார்.