நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் திரையிட 3 தமிழ்ப் படங்கள் தேர்வு

நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் திரையிட 3 தமிழ்ப் படங்கள் தேர்வு
Updated on
1 min read

17வது நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு 3 தமிழ்ப் படங்கள் திரையிடத் தேர்வாகியுள்ளது.

ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 7-ம் தேதி வரை 17வது நியூயார்க் இந்திய திரைப்பட விழா நடைபெறவுள்ளது. இதில் திரையிடப்படுவதற்கு பல்வேறு படங்கள் விண்ணப்பிக்கப்பட்டன.

இதில் விதார்த் நடித்துள்ள 'ஒரு கிடாயின் கருணை மனு', கதிர் நடித்துள்ள 'சிகை' மற்றும் விஜய் சேதுபதி தயாரிப்பில் உருவாகியுள்ள 'மேற்கு தொடர்ச்சி மலை' ஆகிய படங்கள் மட்டும் தேர்வாகியுள்ளன.

இம்மூன்று படங்களில் உலக அளவில் 'ஒரு கிடாயின் கருணை மனு' முதல் திரையிடலாக இத்திரைப்பட விழாவுக்கு தேர்வாகியுள்ளது. 'சிகை' மற்றும் 'மேற்கு தொடர்ச்சி மலை' ஆகிய இரண்டும் இந்தியாவில் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டாலும், உலக அளவில் திரையிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.

தங்களுடைய படங்கள் நியூயார்க் நகரில் நடைபெறும் விழாவுக்கு தேர்வாகியுள்ளதால், இப்படங்களின் குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in