

ஜி.வி.பிரகாஷ் - சரத்குமார் இணைந்து நடிக்கவிருக்கும் 'அடங்காதே' படத்தில் முக்கிய கதாபாத்திரத்துக்கு மந்திராபேடி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
சிம்பு இயக்கி, நாயகனாக நடித்த 'மன்மதன்' படத்தில் கெளரவ தோற்றத்தில் நடித்தவர் மந்திராபேடி. அதற்குப் பிறகு எந்தவொரு தமிழ் படத்திலும் அவர் ஒப்பந்தமாகவில்லை. கிரிக்கெட் வர்ணனையாளராக மட்டும் பணியாற்றி வந்தார்.
புதுமுக இயக்குநர் சண்முகம் முத்துசுவாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - சரத்குமார் இருவரும் இணைந்து நடிக்கவிருக்கிறார். 'அடங்காதே' என பெயரிடப்பட்டு இருக்கும் இப்படத்தில் சுரபி, தம்பி ராமையா, ரோபோ சங்கர், அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மந்திராபேடி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. இப்படத்தை ஸ்ரீ க்ரீன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவிருக்கிறது.