தகராறாக மாறியது பகல் கொள்ளை!

தகராறாக மாறியது பகல் கொள்ளை!
Updated on
1 min read

தயாநிதி அழகிரி தயாரிப்பில் அருள்நிதி நடித்து வெளிவரவிருக்கும் ‘தகராறு’ படத்தின் இசை வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு திங்கள்கிழமை சென்னையில் நடந்தது. படத்தின் நாயகன் அருள்நிதி, படத்தின் இயக்குநர் கணேஷ்விநாயக், நாயகி பூர்ணா, இசையமைப்பாளர் தரண்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அருள்நிதி, ‘‘தகராறு எனக்கு முக்கியமான படம். மதுரையை மையமாக வைத்து படத்தின் திரைக்கதை நகரும். காதல், காமெடி, நடனம் என்று அனைத்தையும் நன்றாக செய்திருக்கும் திருப்தியோடு இருக்கிறேன். துரை தயாநிதி எனக்கு அண்ணன் என்பதைவிட என் உயிர் நண்பன் என்றே சொல்லலாம். ஒரு தயாரிப்பாளராக நல்ல படங்களை எடுக்கும் முயற்சியில் எப்படி ஈடுபாட்டோடு பணியாற்றுகிறாரோ, அதேபோல, நல்ல ஹீரோவாக நானும் பிரகாசிக்க வேண்டும் என்று விரும்பக்கூடியவர். எல்லோரும் ‘அடிச்சிக்கிறாங்க.. அடிச்சிக்கிறாங்க’ என்று எழுதி இப்போ தகராறு என்று படத்துக்கு தலைப்பே வச்சிட்டோம். சிலர் எங்கள் குடும்பத்துக்குள் ‘ஷெல்பிஷ்’ இருப்பதாக நினைக்கிறார்கள். அதெல்லாம் கிடையாது. அதுக்கு எடுத்துக்காட்டாக துரை இந்த படத்தை சப்போர்ட் பண்ணின இந்த விஷயமே போதும்.

படத்தோட இயக்குநர் கணேஷ், முதல்ல ‘மங்காத்தா’ மகத்தைத்தான் நடிக்க வைப்பதா திட்டமிட்டிருந்தாங்க. மகத் எனக்காக விட்டுக்கொடுத்தார். இந்தப்படத்துக்கு, ‘பகல் கொள்ளை’ என்று பெயர் வைத்திருந்தோம். ‘பகல்கொள்ளை’ என்று வைத்தது கதைக்காகத்தான். இந்த தலைப்பை வைத்து நீங்க யாரும் கலாய்ச்சிட வேண்டாம். இது மல்டி ஸ்டார் படம். எங்க டீம் எல்லோருக்கும் முக்கியத்துவம் இருக்கும். தைரியமா சொல்லணும்னா நல்ல ஹீரோவா ஆகிடுவேன். பெரிய இயக்குநர் வைத்து படம் பண்ணலாமேன்னு கேக்குறாங்க. புது இயக்குநர்கள் ஃபயரோட இருக்காங்க.

ஜெயிச்சே ஆகணும்னு நல்ல படம் எடுக்க ஆர்வமா இருக்காங்க. நானும் ஓடுற குதிரையா இருக்கணும்னு விரும்புறேன். என்னோட அடுத்தடுத்த படங்களும் நல்ல படங்களா இருக்கும்!’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in