

'சாட்டை' இயக்குநர் அன்பழகன் இயக்கத்தில் சந்திரன், ஆனந்தி நடித்திருக்கும் படத்துக்கு 'ரூபாய்' என பெயரிட்டு இருக்கிறார்கள்.
சமுத்திரக்கனி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில், பிரபு சாலமன் தயாரித்த 'சாட்டை' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அன்பழகன். 'சாட்டை' படத்துக்கு விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
அன்பழகன் இயக்கும் அடுத்த படத்தையும் தயாரிக்க முன்வந்தார் இயக்குநர் பிரபு சாலமன். சந்திரன், ஆனந்தி, சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பலர் நடித்த அப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்றது. யுகபாரதி பாடல்கள் எழுத, இமான் இசையமைத்திருக்கிறார்.
தற்போது அப்படத்துக்கு 'ரூபாய்' என பெயரிடப்பட்டு, பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இறுதிகட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.