

சற்குணம் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் தாஸ் ராமசாமி நடிப்பில் உருவாகும் படத்துக்கு 'டோரா' என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.
'மாயா' படத்தைத் தொடர்ந்து சற்குணம் தயாரிப்பில் உருவான மற்றொரு பேய் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கினார் நயன்தாரா. புதுமுக இயக்குநர் தாஸ் ராமசாமி இயக்க படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வருகிறார் ஜபக்.
தினேஷ் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு விவேக் மற்றும் மெர்வின் இசையமைத்து வருகிறார்கள். தம்பி ராமையா மற்றும் ஹரிஷ் உத்தமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
மேலும், இப்படத்தில் கார் ஒன்றும் முக்கிய கதாபாத்திரத்தில் இடம்பெற்று இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தார்கள்.
இப்படத்துக்கு தலைப்பு வைக்காமல் படக்குழு படப்பிடிப்பைத் தொடங்கியது. இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படத்தின் தலைப்பு என்ன என்பதை அறிவித்தார். அதில் "நயன் நடிக்கும் பேய் படத்துக்கு ’டோரா’ என்பது தான் தலைப்பு" என்று தெரிவித்திருக்கிறார்.