ட்விட்டர் : காந்தி ஜெயந்தியில் நிஜ வாழ்வின் நாயகன் அஜித்!

ட்விட்டர் : காந்தி ஜெயந்தியில் நிஜ வாழ்வின் நாயகன் அஜித்!
Updated on
1 min read

#RealLifeHeroAJITHKUMAR என்ற டேக்கில் (Tag) இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.

ட்விட்டர் தளத்தில், அன்றைய தினம் இந்திய அளவில் எந்த ஒரு முக்கிய சம்பவம் என்றாலும் அதனைப் பற்றி தொடர்ச்சியாக தகவல் பரிமாற்றத்தால் இந்திய அளவில் டிரெண்ட்டாக ஆரம்பித்து விடும்.

இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தியைப் பற்றி நிறைய பேர் தகவல்களை வெளியிட்டதால், #GandhijiKaChashma மற்றும் #IKnowGandhiji உள்ளிட்ட காந்தியைப் பற்றியவை டிரெண்ட்டாகி வருகிறது.

அதனைத் தொடர்ந்து டிரெண்டாகி வருவது தான் #RealLifeHeroAJITHKUMAR. இதில் அஜித்தை பற்றி பல ரசிகர்கள் தகவல்களை வெளியிட்டு வருவதால் தொடர்ச்சியாக இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.

'கில்லி', 'நண்பன்' ஆகிய விஜய் படங்கள் இன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருவதால், அஜித் ரசிகர்கள் தொடர்ச்சியாக அஜித்தை பற்றி ட்விட்டர் தளத்தில் பேசி அவரை நிஜ நாயகனாக்கி இருக்கிறார்கள்.

'ஆரம்பம்' படம் மற்றும் திரையுலகில் அஜித் கடந்துவந்த காலக்கட்டம் என தொடர்ச்சியாக தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in