

நடிகர் தனுஷின் 25-வது படமாக வெளிவரவுள்ள 'வேலையில்லா பட்டதாரி'யின் ட்ரெய்லர், தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
'வேலையில்லா பட்டதாரி' படத்தின் ட்ரெய்லர் இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டது. யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களில் ஒரு லட்சம் பார்வைகளைக் கடந்தது.
நடுத்தர வர்க்க இளைஞனின் பின்னணியின் அதிரடி, காமெடி, காதல் கலந்த கதையம்சம் கொண்ட இப்படத்தில் அமலா பால், விவேக், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, அனிதா ரத்னம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்தை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கியிருக்கிறார். அனிருத் இசையில் இப்படத்தின் பாடல்கள் ஏற்கெனவே சூப்பர் ஹிட் ஆகியிருப்பது கவனிக்கத்தக்க அம்சம்.
தனது 25-வது படத்தின் இந்த ட்ரெய்லரை ரசிகர்கள் விரும்புவார்கள் என்று தாம் நம்புவதாக, நடிகர் தனுஷ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இப்படத்தின் ட்ரெய்லர் குறித்து இணையத்தில் ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் தமிழ் சினிமா ரசிகர்கள் விவாதித்தும் கருத்துகளைப் பகிர்ந்தும் வருகிறார்கள்.