

‘கபாலி’ படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்ட தைத் தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் சென்னை யில் நேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்ட னர்.
ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படத்தின் பாடல்கள் நேற்று முன்தினம் வெளியிடப் பட்டன. இதைத்தொடர்ந்து சைதாப்பேட்டை ரஜினி ரசிகர்கள் மன்றம் சார்பாக சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டரில் நேற்று கொண் டாட்டங்கள் நடைபெற்றன. 1008 தேங் காய்கள் உடைக்கப்பட்டன. ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ரஜினி நடித்த ‘சிவாஜி’ படம் திரையிடப்பட்டது. படம் தொடங்குவதற்கு முன்பும், இடை வேளையிலும் ‘கபாலி’ படத்தின் டீசர் திரை யிடப்பட்டது. கொண்டாட்டத்தில் அனைத்து ரசிகர்மன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.