

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் உடல் நலக்குறைவால் சென்னை - மயிலாப்பூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் சிவாஜி கணேசனோடு 'பராசக்தி'யில் நடித்தவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். 'வாணம்பாடி', 'அவன் பித்தனா', 'மனோகரா', 'ரத்தக் கண்ணீர்', 'முதலாளி', 'குலதெய்வம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பெயர் பெற்றவர்.
கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.