மனோஜ் இயக்குநராக அறிமுகமாகும் ஒரு கொம்பு கதை

மனோஜ் இயக்குநராக அறிமுகமாகும் ஒரு கொம்பு கதை
Updated on
1 min read

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் 'ஒரு கொம்பு கதை' படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார்.

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் கே.பாரதி. பாரதிராஜாவின் 'பொம்மலாட்டம்', ஷங்கரின் 'எந்திரன்', மணிரத்னத்தின் 'பாம்பே' உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். மேலும், பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.

பாரதிராஜாவின் 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தின் மறுபதிப்பின் மூலமாக இயக்குநராக அறிமுகமாக இருந்தார். தற்போது அப்படத்தின் முன்பாகவே மற்றொரு படத்தினை இயக்கவிருக்கிறார்.

'ஒரு கொம்பு கதை' என பெயரிடப்பட்டு இருக்கும் இப்படத்தில் மஹத் நாயகனாக நடிக்கவிருக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in