கத்தி விபத்தில் இறந்த ரசிகர் குடும்பத்தினருக்கு விஜய் நேரில் ஆறுதல்; ரூ.3 லட்சம் நிதியுதவி

கத்தி விபத்தில் இறந்த ரசிகர் குடும்பத்தினருக்கு விஜய் நேரில் ஆறுதல்; ரூ.3 லட்சம் நிதியுதவி
Updated on
1 min read

தீபாவளி அன்று தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் விஜய் நடித்த 'கத்தி' திரைப்படம் வெளியானது. ரசிகர்கள் பலரும் விஜய்க்கு கட்-அவுட் வைத்து பால் அபிஷேகம் செய்தனர்.

இதில் கேரளாவில் உள்ள வடக்கன்சேரி என்ற இடத்தில் விஜய் கட்-அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்யும்போது உன்னி கிருஷ்ணன் என்ற ரசிகர் ஒருவர் கீழே விழுந்து மரணமடைந்தார். தீபாவளி அன்று மதியம் இந்த துயரச் சம்பவம் நடைபெற்றது.

இன்று கோயம்புத்தூர் ஹிந்துஸ்தான் கல்லூரியில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜய் சென்றிருந்தார். பாலக்காட்டில் உள்ள உன்னிகிருஷ்ணனின் குடும்பத்தினரை விஜய் பார்க்க விரும்பினார்.

கோயம்புத்தூருக்கு வந்திருந்த உன்னிகிருஷ்ணனின் குடும்பத்தினரைப் பார்த்த விஜய் கண்ணீர் மல்க ஆறுதல் கூறினார். அதுமட்டுமன்றி, ரூ.3 லட்சம் நிதியுதவி அளித்தார். "எதிர்காலம் குறித்து கவலை வேண்டாம், நான் இருக்கிறேன்" என்று ஆறுதலுடன் கூடிய உறுதி அளித்திருக்கிறார் விஜய்.

திருவனந்தபுரம், கொல்லம், பாலக்காட்டில் உள்ள விஜய் ரசிகர்களும் அக்குடும்பத்தினருக்கு உதவி செய்ய முன்வந்திருக்கிறார்கள். ஏற்கெனவே ஆலப்புழா, எர்ணாகுளம் உள்ளிட்ட இடங்களில் விஜய் ரசிகர்கள், உன்னி கிருஷ்ணன் குடும்பத்தினருக்கு அளிக்க நிதி திரட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in