ட்விட்டரில் கமல் ஹாசனுக்குக் குவிகிறது வாழ்த்து!

ட்விட்டரில் கமல் ஹாசனுக்குக் குவிகிறது வாழ்த்து!
Updated on
1 min read

இந்தியத் திரையுலகில் காலத்தைத் தாண்டிய கலைஞனாகத் திகழும் நடிகர் கமல் ஹாசனுக்கு இன்று (வியாழக்கிழமை) 59-வது பிறந்த நாள்.

கமல் ஹாசனின் சிறப்புகளை இங்கே எடுத்துரைக்க வேண்டுமா என்ன? தமிழ் சினிமா மீது ஆர்வம் கொண்ட அனைவருக்குமே அவரைப் பற்றி முழுமையாகத் தெரியும் அல்லவா?!

ஆன்லைன் யுகத்தில், மக்கள் தங்கள் நேசத்துக்குரியவர்களை ஆராதிக்கும் இடமாக விளங்குகிறது ட்விட்டர்.

தேச அளவில் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இயங்குபவர்களில் முன்னிலை வகிக்கிறார்கள் தமிழர்கள்.

இதோ... ரசிகர்களால் 'உலக நாயகன்' என்று பெருமிதத்தோடு அழைக்கப்படும் கமல்ஹாசனின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ட்விட்டரில் தொடங்கிவிட்டது.

அதற்காக உருவாக்கப்பட்டு, கமல்ஹாசனுக்கு புகழாரம் சூட்டி, அவரது சாதனைகளை அடுக்கி >#HappyBirthdayKamalHaasan என்ற ஹேஷ்டேக் மூலம் வாழ்த்துகளைக் குவித்து வருகிறார்கள் ட்வீட்டாளர்கள்.

கமல்ஹாசனுக்கு வாழ்த்து மழை பொழியும் இந்த ஹேஷ் டேக் இப்போது தேச அளவில் ட்ரெண்டிங்கிலும் வரத் தொடங்கியிருக்கிறது.

**** நடிகர் கமல் ஹாசன் குறித்த உங்கள் பகிர்வுகளைக் கீழே கருத்துப் பகுதியில் இடலாமே! ****

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in