பலூன் அப்டேட்: இசையமைப்பாளராக யுவன் ஒப்பந்தம்

பலூன் அப்டேட்: இசையமைப்பாளராக யுவன் ஒப்பந்தம்
Updated on
1 min read

ஜெய் - அஞ்சலி நடிப்பில் உருவாகி வரும் 'பலூன்' படத்தின் இசையமைப்பாளராக யுவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சரவணன் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, சர்வானந்த், அனன்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் 'எங்கேயும் எப்போதும்'. இப்படத்துக்குப் பிறகு ஜெய் - அஞ்சலி இருவரும் இணைந்து நடிக்கவில்லை.

தற்போது 5 வருடங்கள் கழித்து மீண்டும் ஜெய் - அஞ்சலி இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். புதுமுக இயக்குநர் சினிஷ் இயக்கவிருக்கும் இப்படத்துக்கு 'பலூன்' என பெயரிட்டு இருக்கிறார். சரவணன் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இப்படத்துக்கு ரூபன் எடிட்டராக பணிபுரிய உள்ளார்.

இப்படத்துக்கு இசையமைப்பாளர் யார் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

யுவன் ஒப்பந்தம் குறித்து இயக்குநர் சினிஷ் "முழுக்க முழுக்க இள வட்டாரங்களுக்கு பிடித்தமான படமாக தான் ’பலூன்’ திரைப்படத்தை உருவாக்கி வருகிறோம். இளைஞர்களை கவரக்கூடிய கதை என்பதால், எங்கள் ’பலூன்’ படத்தில் மெலோடி பாடல்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதினோம். 'மெலோடி' என்றாலே அது யுவன்ஷங்கர் ராஜா தான்...எங்கள் படத்திற்கு அவர் இசையமைப்பது பெரும் மகிழ்ச்சி" என்று தெரிவித்திருக்கிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in