ஜெயித்து விட்டோம்; வந்து பாருங்கள்: தமிழ் ராக்கர்ஸுக்கு விஷால் சவால்

ஜெயித்து விட்டோம்; வந்து பாருங்கள்: தமிழ் ராக்கர்ஸுக்கு விஷால் சவால்
Updated on
1 min read

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ஜெயித்து விட்டோம், வந்து பாருங்கள் என்று தமிழ் ராக்கர்ஸுக்கு விஷால் சவால் விடுத்தார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2017 - 2019-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஷ்வரன் அதிகாரியாகப் பொறுப்பேற்று தேர்தலை நடத்தினார்.

இந்த தேர்தலில் விஷால் தலைவராக வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசும் போது, "எனக்கு வாக்களித்த அனைத்து முதலாளிகளுக்கும் நன்றி. எங்கள் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்கள் நடக்கப் போகின்றன. தயாரிப்பாளர் சங்கத்துக்கு பொற்காலம் போல செயல்படுவோம். மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது.

இந்த தேர்தலில் இளைஞர்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். திருட்டு விசிடி, ஆன்லைன் பைரைசி, தமிழ் ராக்கர்ஸ் ஆகியோருக்கு இப்போது சொல்கிறேன். நாங்கள் ஜெயித்து விட்டோம், இப்போது வந்து பாருங்கள்'' என்று விஷால் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in