சிம்பு படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்

சிம்பு படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
Updated on
1 min read

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படத்திற்கு இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் பணியாற்றி வருகிறார்.

சூர்யா உடனான படம் டிராப் ஆனதைத் தொடர்ந்து, சிம்பு நடிக்கும் படத்தினை இயக்கி வருகிறார் கெளதம் மேனன். இப்படத்தினை முடித்துவிட்டு அஜித் நடிக்கும் படத்தினை பிப்ரவரி 15ம் தேதி முதல் இயக்க திட்டமிட்டு இருக்கிறார்.

சிம்பு - கெளதம் மேனன் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அடையாறு சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்றது. ஆனால், படத்தின் நாயகி, இசையமைப்பாளர் உள்ளிட்ட தகவல்கள் எதையும் படக்குழு தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், சிம்புவிற்கு ஜோடியாக பல்லவி சுபாஷ் என்ற புதுமுக நடிகை நடித்து வருகிறார் என்று படக்குழு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் யார் என்று கேள்வி எழுந்தது.

அக்கேள்விக்கு கெளதம் மேனன் தனது ட்விட்டர் தளத்தில் பதிலளித்து இருக்கிறார். "ஏ.ஆர்.ரஹ்மான் சிம்பு படத்திற்கு இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். ஒரு பாடலை முடித்துக் கொடுத்துவிட்டார். டிசம்பர் 8ம் தேதி முதல் அப்பாடலை படமாக்க இருக்கிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

அப்போ.. இன்னொரு ஹிட் ஆல்பம் தயாராகிட்டு இருக்குனு சொல்லுங்க...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in